சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Thursday, January 26, 2006

பாடல் 3 - குயிலே குயிலே

இளங்குயிலே! இளங்குயிலே!
இளம்காலை வாராயோ!-
உன்இன்பமணிக் குரலெடுத்து
ஏழிசையைப் பாடாயோ!

கவிக்குயிலே! கவிக்குயிலே!
கவிச்சோலை வாராயோ!-
உன்கனி அமுதக் குரலெடுத்து
காதலினைப் பாடாயோ!

கருங்குயிலே! கருங்குயிலே!
கருக்கலிலே வாராயோ!-
என்காதினிலே தேன்பாய்ச்ச
காவியங்கள் பாடாயோ!

மாங்குயிலே! மாங்குயிலே!
மாலையிலே வாராயோ!-
உன்மகரயாழ்க் குரலெடுத்து
மனம்குளிரப் பாடாயோ!

பூங்குயிலே! பூங்குயிலே!
பூஞ்சோலை வாராயோ!-
உன்பொங்குமெழில் குரலெடுத்துப்
பூபாளம் பாடாயோ!

தேன்குயிலே! தேன்குயிலே!
தேரேறி வாராயோ!-
உன்தித்திக்கும் குரலெடுத்து
தெம்மாங்குப் பாடாயோ!

-தெ.சாந்தகுமார்.

4 Comments:

  • At 7:20 PM, Blogger சிறில் அலெக்ஸ் said…

    பரஞ்சோதி நல்ல முயற்சி, வாழ்துக்கள். இன்ரய சூழலில் புதிதாய் குழந்தைப் பாடல்களை ஆக்கவும், தொகுக்கவும் வேண்டியதும் அவசியம்.

    'Twinkle Twinkle little star' ட்யூனில் அதையே மாற்றி,

    'மின்மினி மின்மினி நட்சத்திரம்,
    வானில் தெரிகிற ஆச்சர்யம்,
    உலகத்தின் மேலே வானத்திலே
    வைரம் போலே ஜொலிக்கிறதே'

    எனப் பாடலாமே என்ன நினைக்கிறீர்கள்.

     
  • At 8:59 PM, Blogger thanara said…

    சிறுவர் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன. மேலும்,மேலும்
    தாருங்கள்.
    நன்றி

    தனரா

     
  • At 3:54 PM, Blogger பரஞ்சோதி said…

    வாங்க சிறில் உங்க வாழ்த்துக்கு எனது நன்றிகள்.

    ஆமாம் நீங்க சொன்னது மிகவும் அருமை. ஆங்கில பாடல்களையும் அதே அர்த்தத்தோடு தமிழிலில் மொழி பெயர்ப்பும் செய்யலாம்.

    உங்க மின்மினி பாடல் அருமை.

     
  • At 3:57 PM, Blogger பரஞ்சோதி said…

    தனரா,

    உங்க வருகைக்கு மிக்க நன்றி.

     

Post a Comment

<< Home