சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Thursday, April 27, 2006

பாடல் 14 - ஓட்டை பானையும் திருட்டு எலியும் (தேன் துளி)

பாட்டி வீட்டு பழம்பானை
அந்த பானையில் ஒரு புறம் ஓட்டையடா
ஓட்டை வழியாய் சுண்டெலியும்
உள்ளே புகுந்து கொண்டதடா

உள்ளே புகுந்த சுண்டெலியும்
நெல் ஊதி புடைத்து உண்டதடா
நெல் உண்டு கொழுத்ததனால்
உடல் ஊதி பெருகி விட்டதடா

ஊதி பெருத்த உடலாலே
ஓட்டை வழியாய் வெளியே வரமுடியவில்லை.
காற்று எதுவும் இல்லாமல்
எலியும் உள்ளே இறந்ததடா


இந்த பாடல் திருடி தின்பதும் உழைக்காமல் தின்பதுவும் தவறு என்று சொல்ல வந்தது.

-- தேன் துளி

(சகோதரி வேறு பாடலில் சொன்ன இப்பாடலை அனைவரும் காண தனித்தலைப்பாக கொடுத்திருக்கிறேன்)

13 Comments:

  • At 11:41 AM, Blogger Esha Tips said…

    a nice thirutu eli, very nice contrulation.

     
  • At 12:19 PM, Blogger ஜயராமன் said…

    நன்றாக இருக்கிறது.

    படிக்கும் எங்களையும் சிறுவர்களாக்கி, காலத்தி பின் செலுத்தி எங்களை கிராமத்து பள்ளிக்கூடங்களில் நிறுத்துகிறது தங்கள் பாடல்கள்

    வாழ்த்துக்கள்.

     
  • At 12:52 PM, Blogger வன்னியன் said…

    பாட்டு நல்லாயிருக்கு.
    பதிந்ததுக்கு நன்றி.

     
  • At 4:54 PM, Blogger துளசி கோபால் said…

    பாட்டியின் வீட்டுப் பழம்பானை
    அந்தப் பானையின் ஒருபுறம் ஓட்டையடா
    ஓட்டைவழி ஒரு சுண்டெலியும் அதன்
    உள்ளே புகுந்து நெல் தின்றதடா

    உள்ளே புகுந்து நெல் தின்று தின்று
    வயிர் ( வயிறு)ஊதிப் புடைத்துப் பருத்ததடா
    மெல்ல வெளியில் வருவதற்கும் ஓட்டை
    மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா

    பானையைக் காலை திறந்தவுடன் அந்தப்
    பாட்டியின் பக்கமாய் வந்ததொரு
    பூனை எலியினைக் கண்டதடா அதை
    கவ்விப் பிடித்துத் தின்றதடா


    இதுதான் என் நினைவில் இருக்கு.

     
  • At 5:26 PM, Blogger பரஞ்சோதி said…

    வாங்க தமிழ் பூக்கள்.

    உங்க கருத்திற்கு மிக்க நன்றி.

     
  • At 5:27 PM, Blogger பரஞ்சோதி said…

    வாங்க ஜயராமன் அவர்களே!

    உங்களது செல்ல மகன் எப்படி இருக்கிறார்? கதைகள் படிக்கிறாரா? அவருக்கு எந்த மாதிரி கதைகள் வேண்டும் என்று கேட்டீங்களா?

    இன்னும் நிறைய பாடல்கள் தேடி தர இருக்கிறேன், என் நண்பர்களையும் பாடல்கள் எழுத சொல்லியிருக்கிறேன்.

     
  • At 6:33 PM, Blogger பரஞ்சோதி said…

    வாங்க வன்னியன்,

    உங்கள் வருகை நல்வரவாகுக.

    உங்க நட்சத்திர வாரம் சிறப்பாக இருந்தது.

     
  • At 6:34 PM, Blogger பரஞ்சோதி said…

    துளசி அக்கா,

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    வந்து அருமையான பாடலை கொடுத்திருக்கீங்க.

    உங்க வீட்டு பூனை ரொம்பவும் சுறுசுறுப்பான பூனையாக இருக்குதே :)

     
  • At 3:06 AM, Blogger துளசி கோபால் said…

    குழந்தைகள் பாட்டுமேலே இருக்கற ஆசையாலும், மகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும் என்ற ஆசையாலும்
    குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் 'மலரும் உள்ளம்' இரண்டு தொகுதிகளும் 21 வருசத்துக்கு முன்னாலே
    சென்னையில் தேடித்தேடி வாங்கினேன்.
    பாட்டுச் சொல்லிக் கொடுத்தேனான்னு கேக்கறீங்களா?
    புத்தகம் கந்தல்கந்தலா இருக்கு. எல்லாம் நான் படிச்சுக் கிழிச்சதுதான்.:-))))

     
  • At 12:48 PM, Blogger பரஞ்சோதி said…

    துளசி அக்கா,

    உங்களுக்கு தெரிந்த பாடல்களை இங்கே கொடுக்கலாமே.

     
  • At 12:19 AM, Blogger துளசி கோபால் said…

    அப்படியா? அந்தப் புத்தகத்தில் இருந்து படித்ததில் பிடித்தவையாக இருக்கலாமா?

     
  • At 8:02 AM, Blogger பரஞ்சோதி said…

    கட்டாயம் கொடுங்க சகோதரி.

    பாடலுக்கு கீழே பாடலை எழுதியவருக்கும், அனுப்பியவருக்கும் நன்றி என்று சொல்லி விடுகிறேன்.

    என்னுடைய முகவரி: paransothi@gmail.com

     
  • At 8:13 AM, Blogger துளசி கோபால் said…

    சரிங்க. அப்ப அனுப்பிடறேன்.

     

Post a Comment

<< Home