சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Friday, May 19, 2006

பாடல் 30 - பொன்ஸ் வீட்டு பொம்மு
















எங்கள் வீட்டுப் பூனை
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை

எலியைக் கண்டு விரைவாய்
எதிர்ப்பக்கம் ஓடும் பூனை
சலிக்காமல் தான் வெளியே
சாலை சுற்றும் பூனை

பல்லி பிடித்து வாலை
மட்டும் வெட்டும் பூனை
மல்லிப்பூ போல் வெண்மை
மாறாத பூனை

தங்கையோடு சேர்ந்து
தானும் தூங்கும் பூனை
சங்கு கழுத்தைத் தூக்கி
தாய்மடி கேட்கும் பூனை

நாயைக் கண்டு நடுங்கி
நன்றாய் ஓடும் பூனை
வாயை மெல்லத் திறந்து
கொட்டாவி விடும் பூனை

காலை சரியாய் அழைத்து
உறக்கும் கலைக்கும் பூனை
பாலைக் குடித்து மீதம்
பகைக்கும் வைக்கும் பூனை

பகை = பகைவனான காட்டுப் பூனை :)

சகோதரி பொன்ஸ் (http://www.blogger.com/profile/650829) தன் வீட்டு பூனையின் புகழ் பாடி எழுதிய பாடல்.

6 Comments:

  • At 4:57 PM, Blogger  வல்லிசிம்ஹன் said…

    பரஞ்ஜோதி, பொம்முவும் பொன்சின் பாடலும் அருமை.பாடலுக்கு சுட்டி அழ.வள்ளிஅப்பா என்று நினைத்தேன். நல்ல கவிதை.சக்தியை பாட சொல்லிக் கேளுங்கள். நன்றி.

     
  • At 11:51 PM, Blogger துளசி கோபால் said…

    பொன்ஸ் வீட்டு (நிஜ) பூனை சூப்பரா இருக்கார்:-)))

     
  • At 9:39 AM, Blogger பரஞ்சோதி said…

    நன்றி அம்மா,

    சக்தி இப்போ அத்தை, மாமா, வணக்கம் போன்ற சிறு சிறு வார்த்தைகள் சொல்கிறார், மியாவ் என்று பூனையை காட்டி சொல்லச் சொன்னால் மையான் மையான் என்று இனிமையாக கத்துகிறார்.

    மாலையில் பார்க் சென்றால் அங்கே போறவங்க, வரவங்க எல்லோரையும் அத்தை, மாமா, அக்கா, அண்ணா என்று சொல்லி அழைக்கிறார். பாடல் பாட இரண்டு வயசு ஆன பின்பு தான் சொல்லி கொடுக்கணும்.

     
  • At 9:41 AM, Blogger பரஞ்சோதி said…

    துளசி அக்கா,

    முறுக்கும், பாலும் சாப்பிடுகிறார் தானே, அதான் சூப்பரா இருக்கிறார்.

     
  • At 8:43 AM, Blogger பொன்ஸ்~~Poorna said…

    பாடல் வெளியிட்டதற்கு நன்றி பரஞ்சோதி.. முறுக்கு, பால் மட்டுமில்லை, தயிர்சாதம், அல்வா எல்லாம் கூட சாப்பிட்டுகிட்டு இருந்தது இந்தப் பொம்மு :)

     
  • At 9:03 PM, Anonymous Anonymous said…

    யம்மா பொன்ஸு,

    முன்னே ஒரு தபா பொம்முகுட்டி அம்மாவுக்குன்னு ஒரு படம் வந்திச்சே, அதுக்கும் இந்த பொம்முவுக்கும் ஏதாச்சும் கனெக்சன் இருக்கா?

    பாட்டு நல்லாத்தான் இருக்கு.

     

Post a Comment

<< Home