சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Friday, January 27, 2006

பாடல் 4 - மனதில் கொள் தம்பி!

மனதில்...
காற்றாய்,
நீயும்-
கலந்திட வேண்டும்!
நாற்றாய்,
நீயும்-
நின்றிட வேண்டும்!
மலராய்,
நீயும்-
மணம் வீசிட வேண்டும்!
தேனாய்,
நீயும்-
இனித்திட வேண்டும்
தென்றலாய்,
நீயும்-
இருந்திட வேண்டும்
மலராய்,
நீயும்-
பூத்திட வேண்டும்
மணமாய்,
நீயும்-
பரவிட வேண்டும்
மனிதனாக,
நீயும்-
உயர்ந்திட வேண்டும்!
மண்னெங்கும்
உன் பெருமையே
பேசப்பட வேண்டும்!
மனதில் கொள் தம்பி!

-இரா.நவமணி

3 Comments:

 • At 6:28 PM, Blogger ENNAR said…

  நல்ல பா பாராட்டு பா
  நான் கேட்காத பா
  அப்பப்பா

   
 • At 11:43 PM, Blogger thanara said…

  சிறுவர்கள் புரிந்து கொள்ளக்கூடியவாறு
  அவர்களுக்கு ஏற்ற அருமையான
  பாடல். வாழ்த்துக்கள் நண்பரே.

  தனரா

   
 • At 11:45 PM, Blogger thanara said…

  நல்ல அருமையான பாடல்.
  வாழ்த்துக்கள்.

  தனரா

   

Post a Comment

<< Home