சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Thursday, February 09, 2006

பாடல் - உப்போ உப்பு

உணவில் உப்பு இருந்தால் தான்
உண்ண முடியும் நம்மாலே!
கணமும் உப்பு இல்லாமல்
காலம் தள்ள முடியாதே!

உப்பின் தந்தை கடலாகும்
உப்பளம் உப்பின் இடமாகும்!
உப்பில் அயோடின் இருந்தால் தான்
உடலும் நலமாய் இருந்திடுமே!

உப்பை அதிகம் சேர்த்தாலே
உயரும் ரத்த அழுத்தமே!
எப்பவும் அளவாய் இருந்தாலே
என்றும் நலமாய் வாழ்ந்திடலாம்!

உப்பு யாத்திரை குஜராத்தில்
உத்தமர் காந்தி தலைமையிலே!
உப்புக் காகப் போராட்டம்
உலகை உலுக்கி எடுத்ததுவே!

உப்பே உணவுக்குச் சுவையாகும்
உப்பின்றேல் அது குப்பையாகும்!
உப்பும் உணவும் போலவே நாம்
உலகில் ஒன்றாய் வாழ்வோமே!

பி. வி.கிரி

6 Comments:

 • At 11:20 AM, Blogger Esha Tips said…

  மிக அருமையான பாடல் தொகுப்புகள் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

   
 • At 2:55 PM, Blogger பத்மா அர்விந்த் said…

  உப்போ உப்பு தங்கச்சி
  ஒசத்தி உப்பு தங்கச்சி
  பொட்டு கூடையை கொண்டாயேன்
  போணி பண்ணிட்டு நான் போறேன்
  எட்டு தெரு சுத்தனும்
  ஏழு மூட்டை விக்கனும்
  செல்லா காசு தங்கச்சி
  சீசீ தப்பு தங்கச்சி- இந்த பாட்டை கேட்டிருக்கீங்களா?

   
 • At 5:25 PM, Blogger பரஞ்சோதி said…

  வாங்க தமிழ்பூக்கள் அவர்களே!

  உங்கள் வாழ்த்திற்கு எனது நன்றிகள்.

  நீங்கள் தமிழ்பாப்பா தளத்தில் அதிக பாடல்கள் கொடுங்கள்.

   
 • At 5:28 PM, Blogger பரஞ்சோதி said…

  வாங்க தேன் துளி அவர்களே!

  பாட்டு எசப்பாட்டு பாடி கலக்கிட்டீங்க. மிக்க நன்றி. தொடர்ந்து படித்து கருத்துகள் கூறுங்கள்.

   
 • At 8:04 PM, Blogger மாயவரத்தான் said…

  நல்லாகீதே இந்த வலைப்பூ!

   
 • At 9:48 PM, Blogger பரஞ்சோதி said…

  வாங்க மாயவரத்தான்,

  என்ன கணினியில் தலையை விட்டுட்டு மாட்டிக்கிட்ட மாதிரி இருக்குது.

  ஆமாம், உங்க குட்டி பையன் எப்படி இருக்கிறார், அவருக்காக பாட்டு பாட நிறைய பாடல்கள் கொடுக்கிறேன்.

   

Post a Comment

<< Home