சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Tuesday, April 25, 2006

பாடல் 10 - பலூன்

பத்துக் காசு விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்
பலூன் ஒன்று வாங்கினேன்
பையப் பைய ஊதினேன்

பையப் பைய ஊதவே
பந்து போல ஆனது
பந்து போல ஆனதும்
பலமாய் நானும் ஊதினேன்

பலமாய் நானும் ஊதவே
பானை போல ஆனது
பானை போல ஆனதை
பார்க்க ஓடி வாருங்கள்

விரைவில் வந்தால் பார்க்கலாம்
அல்லது வெடிக்கும் சத்தம் கேட்கலாம்


ஹையா !!! எல்லாரும் ஜோரா கைதட்டுங்கோ !

ஹெக்கே பெக்கெ ஹெக்கே பெக்கெ ஹா ஹா ஹா :)

4 Comments:

 • At 7:35 AM, Blogger Iyappan Krishnan said…

  சின்னப் புள்ளையா இருக்கறப்போ படிஷ்ஷிருக்கேன் இதை பாடப் புத்தகத்திலோ வேற எதிலேயோ வந்தது.. நினைவில்லை

   
 • At 1:08 PM, Blogger MURUGAN S said…

  வாழ்த்துக்கள் நண்பரே,

  பலூன் பாடல் குழந்தைகளுக்கு பிடித்த அருமையான பாடல், உங்கள் சிறுவர் பாடல் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

   
 • At 7:14 PM, Blogger பரஞ்சோதி said…

  வாங்க நண்பரே!

  உங்களுக்கு தெரிந்த பாடல்களையும் இங்கே கொடுங்கள். நன்றி.

   
 • At 2:41 AM, Blogger பத்மா அர்விந்த் said…

  பரஞ்சோதி
  நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்தே வருகிறேன் பல காலமாக. பானை என்று சொல்லிவிட்டு ஒரு பாட்டு சொல்லாவிட்டால் எப்படி?
  பாட்டிவீட்டு பழம்பானை
  அந்த பானையில் ஒரு புறம் ஓட்டையடா
  ஓட்டை வழியாய் சுண்டெலியும்
  உள்ளே புகுந்து கொண்டதடா
  உள்ளே புகுந்த சுண்டெலியும் நெல் ஊதி புடைத்து உண்டதடா
  நெல் உண்டு கொழுத்ததனால் உடல் ஊதி பெருகி விட்டதடா
  ஊதி பெருத்த உடலாலே
  ஓட்டை வழியாய் வெளியே வரமுடியவில்லை.
  காற்று எதுவும் இல்லாமல் எலியும் உள்ளே இறந்ததடா
  இந்த பாடல் திருடி தின்பதும் உழைக்காமல் தின்பதுவும் தவறு என்று சொல்ல வந்தது.

   

Post a Comment

<< Home