சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Wednesday, April 26, 2006

பாடல் 11 - புதிய ஆத்திச்சூடி (விபாகை)

அம்மா என்று சொல்
ஆளுமை வளர்
இலக்கை உயர்த்து
ஈன்றவள் மனம் குளிர்
உலகினை நேசி
ஊர் நலம் பேண்
எளிமை பயில்
ஏளனம் அகல்
ஐம்புலன் கல்
ஒற்றுமை பழகு
ஓங்கிய எண்ணம் கொள்
ஓளவை சொல் கேள்
அஃதே வாழ்க்கை..

- விபாகை

4 Comments:

 • At 6:45 AM, Blogger Sivabalan said…

  Good One!!

   
 • At 12:49 PM, Blogger பரஞ்சோதி said…

  வாங்க சிவபாலன்,

  உங்க வருகைக்கு மிக்க நன்றி.

   
 • At 10:05 AM, Blogger  வல்லிசிம்ஹன் said…

  இந்தப் பாடல் எங்கள் பேரன் அவன் தமிழ் வகுப்பில் கற்றது.

  திங்கள் கிழமை திருட வந்தான்

  செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்கு போனான்,
  புதன் கிழமை புத்தி வந்தது,
  வியாழக்கிழமை விடுதலை ஆனான்,

  வெள்ளிகிழமை வீட்டுக்குப் போனான்
  சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்,
  ஞாயிற்றூக்கிழமை ஞானம் வந்தது!!
  இது சிசாகோ நகர தமிழ் குழந்தைகளுக்காக அமைக்கப் பட்ட, வாரம், கிழமைகைள் பற்றிய பாடல். மனு

   
 • At 12:25 PM, Blogger பரஞ்சோதி said…

  அய்யா மனு அவர்களே!

  குழந்தைகளுக்கு பாடல்கள் என்பது நல்ல விசயங்களை கற்றுக் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.

  கிழமைகள் பற்றி சொல்ல அருமையான பாடல்கள் இருக்கும் போது, ஜெயில், திருடன், ஞானம், சாப்பிட்டான், படுத்தான் என்றா இருக்க வேண்டும்.

  இதாவது பரவாயில்லை, நடேசன் அண்ணா மனம் நொந்து இப்படியும் பாடல் இருக்குது என்று சொன்னதை இங்கே கொடுக்கிறேன், படித்து பாருங்க, மனம் நொந்து போயிடும்.

  பட்டம் விடும் பட்டாபி
  பள்ளியில் விடுவான் கொட்டாவி
  முட்டாள் அவன் முன் கோபி
  மூடி குடிப்பான் காப்பி
  தானே தின்பான் ஜிலேபி
  தரம் கெட்டவன் பீ பீ ப்பீ ப்பீ!!!!

  இது போன்ற மோசமான பாடல்களை எழுதிய கவிஞர்கள் எங்கே என்று தேடி வருகிறேன்.

   

Post a Comment

<< Home