சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Thursday, April 27, 2006

பாடல் 15 - ஊஞ்சல்

ஆல மரத்து ஊஞ்சலாம்
அமர்ந்து ஆடிப் பாடலாம்
காலை உயர நீட்டியே
கீழும் மேலும் ஆடலாம்.

விண்ணை நோக்கிப் போகலாம்
வடக்குத் தெற்குப் பார்க்கலாம்
பண் இசைத்துப் பாடலாம்
பகல் முழுதும் ஆடலாம்.

பழக்க மில்லாப் பிள்ளைகள்
பையப் பைய ஆடலாம்
பழக்கமான போதிலே,
பறந்து விண்ணில் ஆடலாம்.

-சாரணா கையூம்

2 Comments:

  • At 2:12 AM, Blogger ஷாஜி said…

    தமிழ் மன்றத்திலிருந்தே உங்களை படித்து வருகிறேன்.. குறிப்பாக இந்த வலைப்பூவின் பதிப்பும் நோக்கமும் உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டக் கூடியது.. ( நான் குட்டிக் கதைகள்ளாம் நிறைய விரும்பி படிப்பவனாக்கும் )

    தொடர்க பரம்ஸ்..

     
  • At 12:51 PM, Blogger பரஞ்சோதி said…

    வாங்க ஷாஜி,

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    தொடர்ந்து கருத்துகள் கூறுங்கள்.

     

Post a Comment

<< Home