சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Tuesday, May 16, 2006

பாடல் 27 - நம்பிக்கை காக்கா

காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்ததாம்

அங்குமிங்கும் தேடியே
வீடு நோக்கிச் சென்றதாம்

அங்கு சிறிய ஜாடியில்
கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்

எட்டி எட்டி பார்த்ததாம்
எட்டாமல் போனதாம்

சிறிய சிறிய கற்களை
பொறுக்கி கொண்டு போட்டதாம்

தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீர குடித்ததாம்

நம்பிக்கையுடைய காக்கா தான்
சந்தோஷமாய் பறந்ததாம் (3)நன்றி: ஜெயந்தி அர்ஜீன் – நம்பிக்கை கூகிள் குழுமம்

0 Comments:

Post a Comment

<< Home