சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Monday, May 01, 2006

பாடல் 17- மழை (சுகா)

வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா

இடியிடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்

மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்

எட்டு திக்கும் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே

தெருவெங்கும் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே

தவளை கூட பாடுமே
தண்ணீரிலே ஆடுமே

அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை

நன்றி - சுகா (http://sukas.blogspot.com/2006/04/blog-post_02.html)

2 Comments:

  • At 9:37 PM, Blogger Suka said…

    கடைசி வரிகளும் நினைவிற்கு வந்து விட்டது.

    "அகன்ற வெளி வேடிக்கை
    ஆண்டு தோறும் வாடிக்கை"

    என் இரண்டாம் வகுப்பு ஆசிரியை திருமதி. மங்கம்மாள் என்னை மெச்சிக்கொள்வார் :)

    சுகா

     
  • At 11:02 AM, Blogger பரஞ்சோதி said…

    சுகா,

    உங்களின் நினைவாற்றல் திறன் என்னை வியக்க வைக்கிறது.

    உங்களின் இப்பதிலால் என்னுடைய துவக்கப்பள்ளி ஆசிரியர்களையும் நினைவு கூற முடிகிறது.

     

Post a Comment

<< Home