சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Friday, April 28, 2006

பாடல் 16 - சேர்ந்து செய்வோம்

இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்திலிருந்து...

சேர்ந்து செய்வோம்

துண்டுத் தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன்!

துண்டுத் துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய்ப் பொம்மை செய்தனள்!

வண்ணத் தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர்!
சின்னப் பையன் கண்டனன்
சேர்த்துப் பூக்கள் செய்தனன்!

சிறிய துரும்பும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே!
சின்னஞ் சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே!

(எழுதிய கவிஞருக்கும் அதை எனக்கு அனுப்பி வைத்தவருக்கும் நன்றி)

-- பாஸிடிவ் ராமா

2 Comments:

  • At 10:09 AM, Blogger Suka said…

    அருமை.. குழந்தைகளுக்கான (பெரியவர்களுக்கும் நினைவிலிருத்த வேண்டிய ;) )பாடல்களை இங்கே தொகுப்பது மிக நல்ல முயற்சி.

    பாராட்டுக்கள்.

    எனக்கு நினைவினில் இருந்த என் இரண்டாம் வகுப்புப் பாடலை இங்கே பதித்துள்ளேன். உங்கள் தொகுப்பொடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

    http://sukas.blogspot.com/2006/04/blog-post_02.html

    வாழ்த்துக்கள்
    சுகா

     
  • At 3:15 PM, Blogger பரஞ்சோதி said…

    வாங்க சுகா,

    உங்க வருகைக்கு மிக்க நன்றி. உங்க பாடலை தனித்தலைப்பாக கொடுத்திருக்கிறேன். மேலும் பாடல்கள் கிடைத்தால் இங்கே கொடுங்கள்.

     

Post a Comment

<< Home