பாடல் 31 - காட்டில் ஒரு திருமணம்
கருங்குருவி வீட்டில்
ஒரு கலியாணம் நடந்ததாம்
காட்டில் உள்ள பறவையெல்லாம்
கலந்து வேலை செய்திற்றாம்
ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி
ஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்
இரண்டுக் குயில் பறந்து வந்து
இனிமையாகப் பாடிற்றாம்
மூன்று மயில் நடந்து வந்து
முனைந்தழகாய் ஆடிற்றாம்
நான்கு அன்னம் நடந்து வந்து
நாட்டியங்கள் செய்திற்றாம்
ஐந்துக் கிளி கூடிப் பெண்ணை
அலங்கரிக்கச் சென்றதாம்
ஆறு புறா கூடிப்பிள்ளை
அழகுச்செய்ய போயிற்றாம்
ஏழு மைனா கூடிக்கொண்டு
விருந்தினரை அழைத்ததாம்
எட்டுக் காடை கூடிக்கொண்டு
கொட்டுமேளம் கொட்டிற்றாம்
ஒன்பது காக்கை கூடிக்கொண்டு
உறவினரை அழைத்தாம்
பத்து கொக்கு பறந்து வந்து
பந்தல் வேலை பார்ததாம்
ஒரு கலியாணம் நடந்ததாம்
காட்டில் உள்ள பறவையெல்லாம்
கலந்து வேலை செய்திற்றாம்
ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி
ஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்
இரண்டுக் குயில் பறந்து வந்து
இனிமையாகப் பாடிற்றாம்
மூன்று மயில் நடந்து வந்து
முனைந்தழகாய் ஆடிற்றாம்
நான்கு அன்னம் நடந்து வந்து
நாட்டியங்கள் செய்திற்றாம்
ஐந்துக் கிளி கூடிப் பெண்ணை
அலங்கரிக்கச் சென்றதாம்
ஆறு புறா கூடிப்பிள்ளை
அழகுச்செய்ய போயிற்றாம்
ஏழு மைனா கூடிக்கொண்டு
விருந்தினரை அழைத்ததாம்
எட்டுக் காடை கூடிக்கொண்டு
கொட்டுமேளம் கொட்டிற்றாம்
ஒன்பது காக்கை கூடிக்கொண்டு
உறவினரை அழைத்தாம்
பத்து கொக்கு பறந்து வந்து
பந்தல் வேலை பார்ததாம்
1 Comments:
At 10:20 PM, றெனிநிமல் said…
அடடா! பாடல்களுக்கு கூட பக்கம் ஆரம்பித்து அது 31 பாட்டுகள் வந்து விட்டதா?
சபாஷ்,சபாஷ் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Post a Comment
<< Home