சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Wednesday, May 24, 2006

பாடல் 34 - பாப்பா










குட்டி குட்டி பாப்பா
குண்டு கன்னம் பாப்பா
தத்தி தத்தி நடந்திடும்
கட்டித் தங்க பாப்பா

கண்கள் உருட்டி மிரட்டுவாள்
வாய் பொத்தி சிரிக்கும் பாப்பா
சுட்டித்தனம் செய்திடும்
எங்கள் சக்தி பாப்பா

3 Comments:

  • At 3:17 PM, Blogger பரஞ்சோதி said…

    சோதனை மேல் சோதனை.

     
  • At 5:57 PM, Blogger Chellamuthu Kuppusamy said…

    //சோதனை மேல் சோதனை// என்பது பதிவுக்கான சோதனையன்றி உங்களுக்கல்ல. :-)

    ரைம்ஸ் என்றாலே 'ஜேக் & ஜில்' தான் என்பதாக உருவாகி விட்டது நிலை. நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது உங்கள் சேவை. வாசிக்கும் போதே இதம் கிடைக்கிறது.

    -குப்புசாமி செல்லமுத்து

     
  • At 2:21 PM, Blogger பரஞ்சோதி said…

    வாங்க செல்லமுத்து சார்,

    உங்க வருகைக்கு மிக்க நன்றி.

    இப்பாடல்களை எல்லாம் உங்க குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்க, கதைகள் கூடத் தான்.

     

Post a Comment

<< Home