சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Saturday, May 13, 2006

பாடல் 23 - பொம்மை

சின்ன சின்ன பொம்மையிது
சீருடைய பொம்மை
இது சீருடைய பொம்மை
என்தனது தாயாரு
எனக்கு தந்த பொம்மை
இது எனக்கு தந்த பொம்மை

சட்டையிட்டு, தொப்பியிட்டு
நிற்கும் இந்த பொம்மை
இது நிற்கும் இந்த பொம்மை
பொட்டும் வச்சி, பூவும் வச்சி
நிற்கும் இந்த பொம்மை
இது நிற்கும் இந்த பொம்மை

சாவிகொடுத்தா சிரிக்குமது
மணியடிச்சா தூங்கும்
இது மணியடிச்சா தூங்கும்
நல்ல நல்ல நாட்டியங்கள்
செய்யும் இந்த பொம்மை
இது செய்யும் இந்த பொம்மை

அம்மாதந்த பொம்மையிது
சும்மா தருவேனோ
நான் சும்மா தருவேனோ
சுற்றி சுற்றி வந்தாலுமே சும்மாக்கிடைக்காது
இது சும்மாக்கிடைக்காது

நன்றி: ஜெயந்தி அர்ஜீன் – நம்பிக்கை கூகிள் குழுமம்

7 Comments:

 • At 12:42 PM, Blogger துளசி கோபால் said…

  ஒரு சின்னத் திருத்தம் சொல்லிக்கலாமா?

  சீருடைய பொம்மை.

  சீர்

   
 • At 1:42 PM, Blogger பரஞ்சோதி said…

  அக்கா, சொன்ன பின்பு மறு அப்பீல் ஏது?.

  நீங்க பாடல்கள் கொடுத்ததோடு நில்லாமல் தொடர்ந்து பாடல்களை படிக்க வருவது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்குது.

   
 • At 6:09 PM, Blogger பத்மா அர்விந்த் said…

  நல்ல பாடல். டீச்சராச்சே, திருத்தம் சொல்லாம விடுவாங்களா?

  லட்டு பாட்டு:
  தட்டு நிறைய லட்டு
  லட்டு மொத்தம் எட்டு
  கிட்டுவுக்கு நாலு
  பட்டுவுக்கு நாலு
  ஆககூடி எட்டு
  மீதி காலி தட்டு

  கத்திரிக்கா பாட்டு:
  கத்திரிக்கா நல்ல கத்திரிக்கா
  காம்பு நீண்ட கத்திரிக்கா
  புத்தம் புது கத்திரிக்கா
  புதுச்சேரி கத்திரிக்கா
  நாராயணன் தோட்டத்துல
  நட்டுவச்ச கத்திரிக்கா
  பறிச்சு நீயும் கொண்டுவா
  கூட்டு பண்ணி தின்னலாம்

   
 • At 12:46 PM, Blogger துளசி கோபால் said…

  நான் டீச்சர்னு எல்லாரும் ஒத்துக்கிட்டீங்க. அதனாலெ என் வேலையைப் பார்க்கணுமா இல்லையா?

  லட்டுப் பாட்டு

  லட்டும் தட்டும்
  -------------

  வட்டமான தட்டு
  தட்டு நிறைய லட்டு
  லட்டு மொத்தம் எட்டு.


  எட்டில் பாதி விட்டு,
  எடுத்தான் மீதம் கிட்டு.

  மீதம் உள்ள லட்டு
  முழுதும் தங்கை பட்டி
  போட்டாள் வாயில் பிட்டு.

  கிட்டு நான்கு லட்டு,
  பட்டு நான்கு லட்டு,
  மொத்தம் தீர்ந்த தெட்டு
  மீதம் காலித் தட்டு

  பாடல்: குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
  மலரும் உள்ளம் தொகுதி ஒன்று.

  பி.கு: கத்தரிக்காப் பாட்டு நல்லா இருக்கு.

   
 • At 1:50 PM, Blogger பத்மா அர்விந்த் said…

  டீச்சர்: சாரி, பாதி பாட்டை முழுங்கிட்டேன். அடுத்தது எலி பாட்டு போடலாமா?

   
 • At 2:05 PM, Blogger பரஞ்சோதி said…

  அக்கா, இது என்ன கேள்வி, சீக்கிரம் சொல்லுங்க.

  பாவம் புள்ளைங்க பாட்டு பாட எவ்வளவு ஆவலாக இருக்காங்க.

  அப்புறம் அக்கா, அடுத்தது சிறுவர் விளையாட்டுகள் பற்றி ஒரு பதிவு தொடங்க இருக்கிறேன், அதில் சின்ன வயசில் நாம் விளையாட கிராமத்து விளையாட்டுகள், மற்றும் தற்போதைய குழந்தைகள் வீட்டிலோ அல்லது பூங்காவிலோ விளையாட நிறைய விளையாட்டுகள் சொல்ல இருக்கிறேன்.

  உங்களுக்கு தெரிந்ததையும் சொல்லுங்க, முடிந்தால் படங்களோடு விளக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்ன சொல்லுறீங்க.

   
 • At 2:09 PM, Blogger பரஞ்சோதி said…

  //டீச்சர்: சாரி, பாதி பாட்டை முழுங்கிட்டேன். அடுத்தது எலி பாட்டு போடலாமா? //

  ஹா! ஹா!

  லட்டுன்னு பாட்டுல இருக்கும் போதே பாதி விழுங்கிட்டீங்கன்னா, தட்டுல இருக்கும் எல்லா லட்டு உங்களுக்கு எங்களுக்கு தலையில கொட்டு, அதானே :)

   

Post a Comment

<< Home