சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Thursday, June 15, 2006

பாடல் 50 - அன்பு தாயின் தாலாட்டு

ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!

தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!

(இத்தாலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)

யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே!

_________________
அன்புடன்.
அபூ முஹை
----------------
மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்த மாட்டார்.

நன்றி: முத்தமிழ் மன்றம்

2 Comments:

 • At 11:53 AM, Blogger  வல்லிசிம்ஹன் said…

  மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே.
  அத்தை அடித்தாளோ அரளிப்பூ செண்டாலே
  பாட்டி அடித்தளோ,
  தாத்தா அடித்தாரோ
  என்றெல்லாம் வரும்.
  நல்ல பாட்டு.உறக்கமே வருகிறது.
  ஒரு தூளி இருந்தால்,மீண்டும் குழந்தையானால்......

   
 • At 8:34 PM, Blogger பொன்ஸ்~~Poorna said…

  //யாரும் அடிக்கவில்லை! - என்னை
  ஐவிரலும் தீண்டவில்லை!
  பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
  பாசமுள்ள தாயாரே!
  //

  இந்தப் பாட்டுக்கு இந்த மாதிரி anti-climax நான் கேட்டதே இல்லை.. நல்லாருக்கு :)

   

Post a Comment

<< Home