சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Saturday, June 03, 2006

பாடல் 40 - பசுவே பசுவே

பசுவே பசுவே பால் தருவாய்
பச்சைப் புல்லை நான் தருவேன்

பாலைத் தந்தால் காய்ச்சிடுவேன்
பதமாய்க் கோவா செய்திடுவேன்

மாலை நேரம் நண்பருடன்
மகிழ்ந்தே அதனை உண்டிடுவேன்!

2 Comments:

  • At 1:34 AM, Blogger பத்மா அர்விந்த் said…

    நல்ல பாடல். எனக்கு நினைவுக்கு வரும் பாடல்: தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
    அங்கே துள்ளி குதிக்குது கன்னுக்குட்டி
    அம்மா என்றழைக்குது கன்னுக்குட்டி
    நாவால் நக்கி கொடுக்குது வெள்ளைப்பசு

     
  • At 12:35 PM, Blogger பரஞ்சோதி said…

    வாங்க அக்கா,

    நீங்க சொன்ன பாடலை என் மனைவி அடிக்கடி சக்திக்கு பாடி காட்டுவார்.

    ஊருக்கு போன போது மாடு, ஆடு, கோழி, காக்கா, பூனை எல்லாவற்றையும் வீடியோவில் பதிவு செய்து வந்துள்ளார், தினமும் என் மகளுக்கு காட்டு வருகிறோம்.

     

Post a Comment

<< Home