சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Thursday, June 01, 2006

பாடல் 39 - மழை வருது

மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க,

முக்காப் படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

தேடி வரும் மாப்பிள்ளைக்கு
எடுத்து வையுங்க,

சும்மா வரும் மாப்பிள்ளைக்கு
சூடு வையுங்க.

6 Comments:

  • At 9:26 AM, Blogger Chellamuthu Kuppusamy said…

    என் குழந்தைப் பருவம் நினைவு வருகிறது...

     
  • At 12:00 PM, Blogger சுந்தரவடிவேல் said…

    ...
    ஏரு ஓட்டுற மாமனுக்கு
    எண்ணி வையுங்க
    சும்மா இருக்க மாமனுக்கு
    சூடு போடுங்க

    என்று நாங்கள் பாடினோம். நன்று.

     
  • At 4:25 PM, Blogger பரஞ்சோதி said…

    செல்லமுத்து சார்,

    அதுக்கு தான் நல்ல நல்ல பாடல்களை அங்கே இங்கே என்று கடன் வாங்கி பதிவு செய்கிறேன்.

     
  • At 4:26 PM, Blogger பரஞ்சோதி said…

    சுந்தரவடிவேல் சார்,

    வாங்க வாங்க முதல் முறையாக வந்திருக்கீங்க, வாங்க முறுக்கு சாப்பிடுங்க.

    அப்புறம் நான் சொன்ன பாடல் பெண் குழந்தைகள் பாடும் பாடல்.

    ஆண் குழந்தைகள் பாடும் போது மாமனுக்கு சூடு என்று சொல்லி பாடுவாங்க :)

     
  • At 12:39 AM, Blogger பொன்ஸ்~~Poorna said…

    இந்தப் பாட்டே இவ்வளவு தானா? இன்னும் பெரிசா இருக்கும்னு நினைச்சேன்..

    இன்னிக்கு இங்க நல்லா மழை பெய்யுது.. முறுக்குசுட்டுக் கொடுக்கத் தான் அம்மா இல்லை :(

    :)

     
  • At 10:16 AM, Blogger பரஞ்சோதி said…

    பொன்ஸ் சகோதரி,

    எனக்கு பாட்டு இவ்வளவு தான் கிடைத்தது, இன்னமும் இருந்தால் சொல்லுங்க. மத்த பாட்டுகளும் கொடுங்களேன்.

    முறுக்கு சுட அம்மா கூட இல்லையா? வருத்தமாக இருக்குது. எங்க அம்மா அடிக்கடி சென்னையிலிருந்து யாராவது வந்தால் பெரிய டின்னில் அடுக்கி அனுப்பி வைப்பாங்க, நினைக்கிற நேரம் எல்லாம் முறுக்கு தான்.

    அது மாதிரியே பனங்கிழங்கு, அதை அவித்து, காய வைத்து குட்டி குட்டியாக்கி அனுப்பி வைப்பாங்க.

     

Post a Comment

<< Home