பாடல் 38 - கொழுக்கட்டை
கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.
அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.
அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?
3 Comments:
At 12:41 PM, நாமக்கல் சிபி said…
இந்தப் பாடலை மழலைச் சொல் என்று ஒரு பதிவர் ஏற்கனவே சொல்லியிருந்தார். நன்றாக இருந்தது.
அது தொடர்பாக என்னுடைய பதிவு
http://pithatralgal.blogspot.com/2006/02/48.html
At 12:31 PM, பரஞ்சோதி said…
வாங்க அரவிந்தன்,
பாடல் முழுவதும் மழலையர் பாஷையில் இருப்பதால் மாற்றவில்லை.
அடிக்கடி வாங்க, தெரிந்த பாட்டையும் பாடிவிட்டு போங்க, மிக்க நன்றி.
At 12:33 PM, பரஞ்சோதி said…
வாங்க சிபி,
நான் சொல்ல நினைத்தேன், நீங்க சொல்லிட்டீங்க. மிக்க நன்றி.
தாத்தா, தாடி பாடலையும் பார்த்தேன், அடுத்த பாடலாக அதை போட்டுவிடலாம்.
சின்னவயசு சம்பவங்கள் நினைவில் வச்சிருக்கீங்க, அருமை, பாராட்டுகள்.
தொடர்ந்து வாங்க, அப்போ தான் குழந்தைகளுக்கு நிறைய பாடல்கள் கிடைக்கும்.
Post a Comment
<< Home