சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Monday, May 29, 2006

பாடல் 36 - நிலா

“வட்ட நிலா சுற்றிச்சுற்றி
வானில் ஒடுது

வா வென்றே நானழைத்தால்
வர மறுக்குது!

எட்டி எட்டிப் பார்த்தாலுமே
எட்டப் போகுது

ஏனென்று கேட்டால் அது
சிரித்து மழுப்புது"

-- முத்தமிழ் மன்றம்

4 Comments:

  • At 1:04 PM, Blogger ramachandranusha(உஷா) said…

    ஒண்ணாங்கிளாஸ்க்கே போய்விட்டேன் :-)
    ஆனா கடைசி வரி
    "ஏன் என்றுக் கேட்டால்
    அது சிரித்து மழுப்புது"
    என்று நினைவு.

     
  • At 2:10 PM, Blogger பரஞ்சோதி said…

    வாங்க சகோதரி,

    முதல்முறையாக வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

    நீங்க சொன்ன மாதிரி மாத்திட்டா ஆச்சுது :).

    மழுப்பு என்பதன் சரியான அர்த்தம் என்ன?

    நானும் எங்க ஊர் பாஷையில் ஏலே மழுப்பாதலே என்று சொல்லியிருக்கிறேன், ஒரு விசயத்தை பற்றி தெரிந்தும் தெரியவில்லை என்று சொல்லும் போது.

     
  • At 12:35 AM, Blogger Maayaa said…

    chinna chinna paadal
    singarap punnagai tharum paadal

    these songs are very suitable for small children to learn tamil and as well as good ethics.

    Keep up your work !!

    Have you taken efforts to bring children to your blogspot ? If not, as a wellwisher, I seriously would request you to consider about it??
    Rather than reading them all in a book, it would be interesting if parents or children can visit regularly and learn things gradually!!!

     
  • At 9:50 AM, Blogger ramachandranusha(உஷா) said…

    பரஞ்சோதி, அதேதான் மழுப்புதல்- பிடிக்கொடுக்காமல் பேசுதல் அல்லது நழுவுதல்

     

Post a Comment

<< Home