பாடல் 42 - தாத்தாவும் பெரிய தாடியும்
காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்
ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன
உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்
ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன
உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.
2 Comments:
At 10:15 AM, Anonymous said…
This Just reminds me of my 1st standard. I still remember the picture of old man having lengthu white beard and few birds flying around his beard.
At 11:47 AM, நாமக்கல் சிபி said…
//I still remember the picture of old man having lengthu white beard and few birds flying around his beard.
//
ஆம்! ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் இப்பாடல் இடம்பெற்றிருக்கும்.
Post a Comment
<< Home