பாடல் 4 - மனதில் கொள் தம்பி!
மனதில்...காற்றாய்,நீயும்-கலந்திட வேண்டும்!நாற்றாய்,நீயும்-நின்றிட வேண்டும்!மலராய்,நீயும்-மணம் வீசிட வேண்டும்!தேனாய்,நீயும்-இனித்திட வேண்டும்தென்றலாய்,நீயும்-இருந்திட வேண்டும்மலராய்,நீயும்-பூத்திட வேண்டும்மணமாய்,நீயும்-பரவிட வேண்டும்மனிதனாக,நீயும்-உயர்ந்திட வேண்டும்!மண்னெங்கும்உன் பெருமையேபேசப்பட வேண்டும்!மனதில் கொள் தம்பி!
-இரா.நவமணி
பாடல் 3 - குயிலே குயிலே
இளங்குயிலே! இளங்குயிலே!இளம்காலை வாராயோ!-உன்இன்பமணிக் குரலெடுத்துஏழிசையைப் பாடாயோ!கவிக்குயிலே! கவிக்குயிலே!கவிச்சோலை வாராயோ!-உன்கனி அமுதக் குரலெடுத்துகாதலினைப் பாடாயோ!கருங்குயிலே! கருங்குயிலே!கருக்கலிலே வாராயோ!-என்காதினிலே தேன்பாய்ச்சகாவியங்கள் பாடாயோ!மாங்குயிலே! மாங்குயிலே!மாலையிலே வாராயோ!-உன்மகரயாழ்க் குரலெடுத்துமனம்குளிரப் பாடாயோ!பூங்குயிலே! பூங்குயிலே!பூஞ்சோலை வாராயோ!-உன்பொங்குமெழில் குரலெடுத்துப்பூபாளம் பாடாயோ!தேன்குயிலே! தேன்குயிலே!தேரேறி வாராயோ!-உன்தித்திக்கும் குரலெடுத்துதெம்மாங்குப் பாடாயோ!
-தெ.சாந்தகுமார்.
பாடல் 2 - கல்வி
கல்வி என்பதுகண்களைத் திறப்பது!
கல்லாதிருப்பதுகண்களைத் துறப்பது!
செல்வம் அனைத்திலும் சிறப்பிடம் வகிப்பது!
இல்லார்க் கெடுத்ததைஇறைப்பினும் மிகுப்பது!
எல்லா இடத்திலும்ஏற்றம் அளிப்பது!
பொல்லா மடமையைப்பூண்டோ டொழிப்பது!
அல்லும் பகலும்அணையா விளக்கது!
கல்லில் பதியும்கலையா எழுத்தது!
சொல்லில் கனிவுசுவையைக் குழைப்பது!
வெல்லும் துணிவுவிவேகம் விளைப்பது!-
தளவை: இளங்குமரன் செங்கற்பட்டு.
பாடல் 1 - இறை வணக்கம்
'ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே'